துருக்கி விமானம் கடத்தல்-விமான பணிப்பெண்கள் சாதுர்யத்தால் தப்பிய பயணிகள்!
இஸ்தான்புல்:வடக்கு சைப்ரஸில் இருந்து இஸ்தான்புல் சென்று கொண்டிருந்த துருக்கி நாட்டு விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர். ஆனால், விமானப் பணிப் பெண்களின் சாதுரியத்தால் பெரும்பாலான பயணிகள் தப்பிவிட்டனர்.
அட்லஸ்-ஜெட் என்ற அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் இன்று அதிகாலை துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சைப்ரஸின் எர்கான் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளுடன் தலைநகர் இஸ்தான்புல்லுக்கு பறந்து கொண்டிருந்தது.
விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் 2 தீவிரவாதிகள் விமானிகளின் காக்பிட் அறையை நோக்கி ஓடி அதை திறக்க முயன்றனர். ஆனால், திறக்க முடியவில்லை.
![]() |
இதையடுத்து தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறிய தீவிரவாதிகள் விமானத்தை ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குத் திருப்புமாறு இன்டர்காம் மூலம் விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.
விமானிகளுக்கு அதற்கு ஒப்புக் கொள்வதாகக் கூறிவிட்டு விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்றனர். இதையடுத்து துருக்கியின் அனடாலியா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க தீவிரவாதிகள் அனுமதித்தனர்.
அங்கு தரையிறங்கியவுடன் பெண்களையும் குழந்தைகளையும் மட்டும் விடுவிப்பதாகக் கூறிய தீவிரவாதிகள் விமானப் பணிப் பெண்களிடம் முன் பக்கக் கதவை திறக்க உத்தரவிட்டனர்.
![]() |
ஆனால், இரு தீவிரவாதிகளும் விமானத்தின் முன் பக்கமாக இருப்பதை உணர்ந்த விமானப் பணிப் பெண்களில் இருவர் தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் பின் பக்க கதவையும் திறந்துவிட்டு, சறுக்குப் பாதையையும் போட்டு பயணிகளை வெளியேறுமாறு சைகை காட்டினர்.
இதையடுத்து முன் பக்கமாக பெண்களையும் குழந்தைகளையும் தீவிரவாதிகள் இறக்கிவிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குத் தெரியாமல் பெரும்பாலான பயணிகள் பின் பக்கமாக வெளியேறி தப்பிவிட்டனர். 2 விமானிகளும் தப்பிவிட்டனர்.
4 பயணிகளும் 2 விமான சிப்பந்திகளும் மட்டும் விமானத்தில் மிச்சமிருந்த நிலையில் அதை துருக்கி நாட்டு கமாண்டோக்கள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் சரணடைந்தனர். மீதமிருந்த பயணிகளையும் சிப்பந்திகளையும் விடுவித்தனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் சரணடைந்தனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வந்தன. ஆனால், அதில் ஒருவன் துருக்கியையும் இன்னொருவன் பாலஸ்தீனத்தையும் சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது.














Click it and Unblock the Notifications