6 எம்எல்ஏக்கள் போர்க்கொடி: மோடிக்கு நெருக்கடி
அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள 6 பாஜக எம்.எல்.ஏக்களால் மோடி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த நரேந்திரமோடி முதல்வராக இருக்கிறார். அவருக்கு எதிராக சமீப காலமாக பாஜகவுக்குள் பிரச்சினைகள் வெடித்து வருகின்றன. கட்சியின் பிறத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.
![]() |
இந்த நிலையில் 6 பாஜக எம்.எல்.ஏக்கள் மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து கேசுபாய் படேல் கூறுகையில், குஜராத்தில் மோடி தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அதற்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது.
எந்தவொரு கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் கருத்தை சொல்ல உரிமை உண்டு. அப்படி கருத்து சொன்னதற்காக 7 பாஜக எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கியது மிகத் தவறான செயலாகும் என்றார்.
முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், நரேந்திர மோடிக்கு நெருங்கிய நண்பர். இதுவரை மோடிக்கு எதிராக அவர் எந்த கருத்தையும் சொன்னது கிடையாது. ஆனால் மோடியின் அராஜகமான நடவடிக்கைகள் அவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.
கேசுபாய் இப்படி பேசியது அம்மாநில எதிர்கட்சியினருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். மோடியின் செயல்பாடுகளினால் திருப்தி அடையாத 6 எம்எல்ஏக்கள் எதிரணிக்கு தாவ முடிவு செய்துவிட்டனராம். இதனால் மோடியின் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மோடிக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள் கேசுபாய் படேல் தலைமையில் தனி அணியாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனராம்.













Click it and Unblock the Notifications