மூணாறு தேனிலவுக் கொலை: 20ம் தேதி தீர்ப்பு
மூணாறு:நாட்டையே உலுக்கிய மூணாறு தேனிலவுக் கொலை வழக்கில் வருகிற 20ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தராமன். இவருக்கும் அனகாபுத்தூரைச் சேர்ந்த வித்யா என்பவருக்கும் கல்யாணம் ஆனது. கல்யாணத்திற்குப் பின்னர் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூணாறுக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்டனர்.
![]() |
அப்போது குண்டலை என்ற இடத்தில் 18ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் அனந்தராமன். அவரைக் கெலை செய்ததாக மனைவி வித்யா, அவரது கள்ளக்காதலனான ஆட்டோ டிரைவர் ஆனந்த் மற்றும் ஆனந்த்தின் நண்பரான அன்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மூணாறைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் உதவியால் மூன்று பேரும் சிக்கினர். போலீஸ் விசாரணையில், ஆனந்த்தும், வித்யாவும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் வித்யாவை, அனந்தராமனுக்கு அவரது தந்தை கட்டி வைத்து விட்டார்.
இருந்தாலும் தனது காதலனை மறக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார் வித்யா. இதையடுத்து அவர் போட்டுக் கொடுத்தத் திட்டத்தின்படி ஆனந்த்தும், அன்புராஜும் மூணாறுக்கு வந்து அனந்தராமனைக் கொலை செய்ததாக தெரிய வந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. கைது செய்யப்பட்ட வித்யா உள்ளிட்ட 3 பேர் மீதும் தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மூன்று பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதனால் 3 பேரும் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 40 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. நேற்று வக்கீல்கள் வாதம் நடந்தது. இதையடுத்து 20ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ஜனார்த்தன் அறிவித்தார்.













Click it and Unblock the Notifications