2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் 2 போலி பாஸ்போர்ட்டுகளுடன் இலங்கை செல்ல வந்த ராமநாதபுரம் வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (30). இவர் இலங்கை செல்வதற்காக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு அனைத்து சோதனைகளும் முடிந்து கடைசியாக குடியுரிமை சோதனை நடைபெற்றது. அப்போது அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அது போலியானது என்று தெரியவந்தது. அவரை தனியாக விசாரித்த அதிகாரிகள் மேலும் ஒரு போலி பாஸ்போர்ட்டை அவரிடமிருந்து கைப்பற்றினர்.

இவர் யார் ஏன் இரண்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். சட்டப்படி ஒருவர் ஒரு பாஸ்போர்ட் தான் அனுமதி உண்டு. இவர் வைத்திருந்தது போலியான பாஸ்போர்ட். அதிலும் இரண்டை வைத்திருந்ததால் குடியுரிமை அதிகாரிகள் அவரை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+