கொசு மருந்தை உடலில் செலுத்தி நர்ஸ் தற்கொலை
சேலம்: கள்ளக்காதல் கொடுமையால் பெண் நர்ஸ் ஒருவர், கொசு மருந்தை உடலில் செலுத்தித் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள லாங்லிபேட்டையைச் சேர்ந்தவர் மேரி. இவரது மகள் கார்த்திகா (24). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார் கார்த்திகா. மருத்துவமனையின் மாடியில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை கார்த்திகாவின் அறை வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர்.
அப்போது கார்த்திகா அங்கு இறந்து கிடந்தார். அவரது அறையில் சிரிஞ்சும், காலி கொசு மருந்து பாட்டிலும் கிடந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து பார்த்தனர். அறையில் கார்த்திகா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அதில்,
மணி நல்லவர். என் சாவுக்கு ராஜம்மாவும், ராணியும் தான் காரணம். மணிக்கு இதில் தொடர்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு செல்போன் எண்ணும் அதில் இருந்தது.
அந்த செல்போன் எண், கார்த்திகாவின் அண்ணன் வினோத்துடையது என்று தெரிய வந்தது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மணி என்பவரை கார்த்திகா காதலித்து வந்துள்ளார். மணி ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவி பெயர்தான் ராஜம்மா. ராணி என்பவர் யார் என்று தெரியவில்லை.
மணி, கார்த்திகா கள்ளக்காதலை அறிந்த ராஜம்மா, கார்த்திகாவை பார்த்து சண்டை போட்டுள்ளார். அவருடன் ராணி என்பவரும் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
கார்த்திகா வேலைக்கு சேர்ந்து 10 நாட்கள் தான் ஆகிறதாம். இதற்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 5 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். அவரின் நடத்தை சரியில்லாமல் அந்த நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்திவிட்டது. அதன்பின்பு கார்த்திகாவின் கள்ளக்காதலர் மணி தான் தற்போதைய மருத்துவமனையில் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
மணி, ராஜம்மா, ராணி ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். கார்த்திகாவின் அண்ணன் வினோத் கூறுகையில், இது தற்கொலை அல்ல. திட்டமிட்டு கொலை செய்துள்ளார்கள். கார்த்திகாவின் மூக்கில் பஞ்சு வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் வருவதற்கு முன்பு அதற்கான தடயங்கள் கலைக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications