பெண் காவலரை கற்பழிக்க முயன்றவர் கைது
சென்னை:சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், மனைவியின் தோழியான பெண் காவலரைக் கற்பழிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் காவலராக வேலை பார்த்து வருபவர் லலிதா (40). இவருடன் பணிபுரிந்து வருகிறார் சகாயமேரி.
இருவரும் தோழிகள், ஒரே காவலர் குடியிருப்பில் அருகருகே வசித்து வருகின்றனர். லலிதாவின் கணவர் சுரேஷ், திருப்பூரில் எஸ்.டி.டி. பூத் வைத்துள்ளார். எப்போதாவதுதான் சென்னைக்கு வந்து மனைவியை சந்திப்பாராம்.
இதனால் தனிமையில் வாடிய லலிதாவுக்கு, மேரியின் நட்பு நல்ல ஆறுதலாக இருந்தது. தனது வீட்டில் இருப்பதை விட பெரும்பாலும் மேரியின் வீட்டில்தான் நேரத்தைக் கழிப்பாராம்.
லலிதாவின் வனப்பும், அவரது தனிமையும் சகாய மேரியின் கணவர் ஜான் பாலுக்கு காம இச்சையைத் தூண்டி விட்டது. லலிதாவை அடைய வேண்டும் என முடிவு செய்த அவர் லலிதா தனிமையில் கிடைக்கும்போது ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி சிக்னல் கொடுத்துப் பார்த்துள்ளார்.
ஆனால் லலிதா அதற்கு மயங்கவில்லை. இதனால் ஜான்பாலின் ஆசை அதிகமானதே தவிர குறையவில்லை. ஒரு கட்டத்தில் கட்டாயப்படுத்தியாவது லலிதாவை அடைந்து விட அவர் முடிவு செய்தார்.
இந்த நிலையில் லலிதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர் அவருக்குத் தெரியாமல் வீட்டுக்குள் புகுந்தார். படுக்கை அறைக்குள் போய் மறைந்து கொண்டார். அப்போது லலிதா அறைக்குள் வந்துள்ளார்.
இந்த சமயத்தில் ஜான் பால், லலிதாவைக் கட்டிப்பிடித்துக் கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விட்டார்.
அக்கம் பக்கத்தில் வசிப்போர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதைப் பார்த்த ஜான்பால் அதிர்ந்து போய் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனால் வீட்டின் நாலாபுறமும் சுற்றி வளைத்த அக்கம் பக்கத்தினர் ஜான்பாலை மடக்கிப் பிடித்து நாலு போடு போட்டு போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் ஜான்பாலைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications