போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் பூவசரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அதில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications