திருச்சியில் பிரபல ரவுடி கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சி அருகே திருவானைக்காவலில் இன்று பிரபல ரவுடி ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் சன்னதி தெருவைச் சேர்ந்தவன் ரமேஷ். பிரபல ரவுடியான இவன் திருச்சி மாவட்டத்தையே கொலை, கொள்ளை மூலம் அச்சுறுத்தி வந்தான்.

கடந்த 1995ம் வருடம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடந்த கொலை வழக்கிலும், 2002ம் ஆண்டு மனச்சநல்லூரில் நடந்த கொலை வழக்கிலும் முக்கிய இவனுக்கு தொடர்புள்ளது. இது மட்டுமல்லாமல் பல கொள்ளை, மிரட்டல், அடிதடி என நிறைய வழக்குகள் ரமேஷ் மீதுள்ளன.

அனைத்து வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே இருந்த ரமேஷ், தொடர்ந்து தனது ரவுடித்தனத்தை செய்து வந்துள்ளான்.

திருவானைக்காவல் பகுதியில் நேற்று கணேஷ் என்ற வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். இது தொடர்பாக சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து ரவுடி ரமேஷை கைது செய்தனர். இவன் கடந்த 12 வருடங்களாக திருச்சியில் ரவுடியிசம் செய்து வருபவன். இவன் மீது 13 வழக்குகள் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். அதனால் விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+