கதவு மூடாததால் லண்டன் விமானம் ரத்து
சென்னை:சென்னையிலிருந்து லண்டன் செல்வதாக இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தின் கதவு மூடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து லண்டன் செல்ல பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று தயாராக இருந்தது. விமானத்தில் 270 பயணிகள் இருந்தனர். அனைவரும் விமானத்தில் ஏறியதைத் தொடர்ந்து விமான ஊழியர் ஒருவர் கதவை மூடினார். ஆனால் கதவு மூடிக் கொள்ளவில்லை. பலமுறை முயன்றும் கதவு மூடிக் கொள்ளவில்லை.
இதையடுத்து விமான நிலைய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து கதவை சரி பார்த்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கடந்தும் கூட கதவை சரி செய்ய முடியவில்லை.
இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து கதவை ரிப்பேர் செய்ய பொறியாளர்கள் வரவுள்ளனர். இன்று விமானம் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications