தத்தளித்த தமிழக மீனவர்கள்-காப்பாற்றிய இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:2 படகுகள் மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கைக் கடற்படை காப்பாற்றியது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில் நல்லையா, மனோகரன், ரத்தினம், இளையபெருமாள் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பயங்கர சூறாவளிக் காற்றில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து நான்கு மீனவர்களும் உயிருக்குப் போராடினர்.

அப்போது அப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை மீட்டனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று உணவு, உடைகளைத் தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நாளை இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களது படகின் என்ஜின் பழுதடைந்ததால் இவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இந்த 8 மீனவர்களையும் விமானம் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க இலங்கையில் உள்ள இந்தியத் திட்டமிட்டுள்ளது.

ராணுவ தாக்குதலில் 9 புலிகள் பலி:

இந் நிலையில் ராணுவம் நடத்திய இருவேறு தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 9 புலிகள் பலியானதான ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் மேற்கு ஓமந்தையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற சண்டையில் 7 புலிகள் கொல்லப்பட்டனர்.

இதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 8 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இங்கும் புலிகள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+