மனைவியை கொல்ல முயற்சி, பெண் எஸ்.ஐயுடன்2வது கல்யாணம்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்:தன்னைத் தாய் வீட்டுக்கு விரட்டி விட்டு விட்டு பெண் எஸ்.ஐயுடன் குடும்பம் நடத்தியதைத் தட்டிக் கேட்ட மனைவியைக் கொல்ல முயன்றதாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர், 2வது மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஓலைப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கத்துரை. சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக கோவையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர் மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவர்களுக்கு கவின், பவிஷ் என்கிற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்தோடு சேலம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

Vanitha with Children

திருமணத்தின்போது வனிதாவுக்கு அவரது பெற்றோர் தரப்பிலிருந்து 40 பவுன் நகையும், வீட்டு உபயோகப் பொருட்களும் வரதட்சணையாக தரப்பட்டன.

இந்த நிலையில் தனது மனைவியை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்க நினைத்த தங்கத்துரை, அதற்குத் தேவைப்பட்ட ரூ. 1.50 லட்சம் பணத்தை வாங்கி வருமாறு வனிதாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பினார். அவரும் தனது பெற்றோரிடம் போய் பணம் கேட்டுள்ளார். அவர்கள் ரூ. 1 லட்சம் பணத்தைப் புரட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

மீதப் பணத்தையும் போய் வாங்கி வருமாறு கூறி வனிதாவை தங்கத்துரை கொடுமைப்படுத்தியுள்ளார். அடித்து உதைத்துள்ளார். அவருடன் சேர்ந்து தாயார் மீனா, சகோதரிகள் கலைமணி, ஜோதி ஆகியோரும் வனிதாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

Thangadurai

இதனால் தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார் வனிதா. இந்த நிலையில் கணவர் மனம் மாறியிருப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வந்த போதுதான், தனது கணவருக்கு ஏற்கனவே உஷாராணி என்கிற சப் இன்ஸ்பெக்டருடன் கல்யாணம் ஆகியிருப்பதும், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தங்கத்துரை தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். மேலும் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலை செய்யவும் பார்த்துள்ளார்.

அவரிடமிருந்து தப்பி வந்த வனிதா, தனது கணவரின் கொடுமைகள் மற்றும் 2வது கல்யாணம் குறித்து கோவை மண்டல ஐஜி ராஜேந்திரனை சந்தித்து விரிவாக புகார் கொடுத்தார். இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு டி.எஸ்.பி. அசோக்குமாருக்கு ஐஜி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனது புகார் குறித்து போலீஸார் துரிதமாக விசாரிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு செய்தார் வனிதா.

இதன் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தி தங்கத்துரை, அவரது தாயார் மீனா, சகோதரிகள், தங்கத்துரையின் முதல் கல்யாணத்தை அறிந்து கொண்டே இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்த உஷாராணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கு தற்போது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+