மக்களுக்காகவே அரசியல் - சொல்கிறார் சரத்
துபாய் : மக்களுக்கு சேவை புரியவே அரசியலில் இறங்கியுள்ளேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யு.ஏ.இ) ராசல் கைமாவில் இருந்து வானொலி சேவையை வழங்கி வரும் சக்தி எப்.எம். க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்து உள்ளார் சரத்குமார்..
தனது பேட்டியில் சரத்குமார் கூறுகையில், நான் ஒரு இளநிலை கணிதப் பட்டாரி. இப்படிப்பின் மூலம் மாதம் பத்தாயிரமோ, இருபதாயிரமோ சம்பாதித்திருக்கலாம். ஆனால் நான் கோடிக்கணக்கில் சினிமாவின் மூலம் சம்பாதிப்பதற்கு தமிழ் ரசிகப் பெருமக்கள் தான் காரணம்.
அத்தகைய தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய திட்டமிட்டு திமுகவிலும் அதனைத் தொடர்ந்து அதிமுகவிலும் அங்கம் வகித்தேன். எனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டதையடுத்து அக்கட்சிகளில் இருந்து விலகினேன்.
எதிர்வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி புதுக்கட்சி துவங்க இருக்கிறேன். இளம் வயதில் எனது தந்தையிடமிருந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டதே பொது சேவையில் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைந்தது.
நாளுக்கு நாள் புதுப்புது நடிகர்கள் வந்தாலும் எனக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. என் கையில், தற்போது ஆறு படங்கள் உள்ளன. அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட நேரம் வரும்போது எதில் (சினிமாவா, அரசியலா) முழு நேரம் ஈடுபட வேண்டும் என்பதை தீர்மானிப்பேன் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications