காதலனுடன் மணப்பெண் கல்யாணம்:அதிர்ச்சியில் மணமகன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:நிச்சயக்கப்பட்ட மணமகனை உதறி விட்டு காதலனுடன் மணப்பெண் திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த மணமகன் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே போழூவரம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் சுரேஷ்குமார். இவர் அங்குள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண்னுக்கும் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களுக்கு வரும் 27 ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் மணப் பெண், வடவள்ளியை சேர்ந்த செந்தில் என்பவரோடு பல மாதங்களாக காதலில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

காதலனை மறக்க முடியாத அவர், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை மணக்க மனம் இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து காதலனை கல்யாணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த மணமகன் சுரேஷ் அதிர்ச்சியிலும், அவமானத்திலும் தற்கொலை செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+