வேளாங்கண்ணி திருவிழா: சிறப்பு பேருந்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெறும் மாதா கோவில் திருவிழாவுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.

வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த விழாவுக்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொள்வார்கள்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவையொட்டி ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பக்தர்களின் வசதிக்காக நாகப்பட்டணம் மாவட்ட நிர்வாகமும், மாதா கோவில் நிர்வாகமும் சேர்ந்து அடிப்படை வசதிகளை மும்மரமாக செய்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, நாகப்பட்டணம், காரைக்கால், புதுச்சேரி, நாகூர், சிதம்பரம், பட்டுக்கோட்டை, பூண்டி மாதா கோவில், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+