ஓணம்: கேரள எல்லை தமிழக நகரங்களில்காய்கனிகள் விலை கிடுகிடு உயர்வு
திருநெல்வேலி:ஓணம் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் கேரள எல்லையில் உள்ள தமிழக ஊர்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
![]() |
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்த பெற்ற பண்டிகை "மகாபலி" என்றழைக்கப்படும் திருவோணம். வரும் 26-ந் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரள மக்களால் மதப் பாகுபாடின்றி கொண்டாடப்படும். இப்பண்டிகையின்போது முழுக்க பச்சை காய்கறிகளையும், பூக்களையும் தான் கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துவர்.
தற்போது ஓணம் நெருங்கி வருவதைத் தொடர்ந்து கேரள எல்லையை ஒட்டியுள்ள தென் மாவட்ட பகுதிகளான புளியங்குடி, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் காய்கறிகள் அதிகளவு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சங்கரன்கோவிலிலில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் செல்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் காய்கறி, பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கத்திரிக்காய் 26 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கின் விலை ரூ. 20 ஆக உள்ளது. மிளகாய் 30 ரூபாய்க்கும், தக்காளி 16 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கேரட், பீன்ஸ் ஆகியவை கிலோ ரூ. 25க்கு விற்கப்படுகிறது. பாவைக்காய் கெட்ட கேட்டுக்கு ரூ. 25க்கு விற்கிறது. வெண்டைக்காய் கிலோ ரூ. 26க்கும் விற்கப்படுகிறது.
ஒரு வாழைக்காயின் விலை 2.50 ரூபாயாக உள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதேசமயம், விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளை விட மொத்த விற்பனை செய்யும் புரோக்கர்களும் வியாபாரிகளும் தான் அதிக பணம் ஈட்டி வருகின்றனர்.
இரண்டு பக்கமும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் நின்றதால் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய பெரும் சிரமப்பட்டனர். இன்று அதிகாலை 6 மணிக்குதான் நெரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வழக்கமான போக்குவரத்து துவங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications