மீண்டும் வருகிறது ஜம்போ பாஸ்போர்ட்!
சென்னை:பாஸ்போர்ட் புதுப்பித்தல் தொடர்பாக பெருகி வரும் கூட்டத்ைத தவிர்க்க முன்பிருந்ததைப் ேபால ஜம்போ பாஸ்போர்ட் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பாஸ்போர்ட் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை பிராந்தி பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜம்போ பாஸ்போர்ட் 64 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். புத்தக வடிவில் இருக்கும் இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இத்தகைய பாஸ்போர்ட்டை இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அமல்படுத்தவுள்ளோம்.
தற்ேபாது உள்ள பாஸ்போர்ட் 36 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இதவும் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
தற்ேபாது அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கான பயோ மெட்ரிக் பாஸ்போர்ட்கள் டெல்லியில் மட்டும் வழங்கப்படுகின்றன.
பாஸ்போர்ட் அலுவலங்களில் புதிய பாஸ்போர்ட்டுகள் கோரி விண்ணப்பிப்பவர்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு தத்கல் முறையே காரணம்.
புதிய பாஸ்போர்ட்கள் கோரி விண்ணப்பிப்ேபாருக்கு 5 நாட்களில் அது வழங்கப்படுகிறது. புதுப்பித்தல் பணியை 3 நாட்களில் முடித்து விடுகிறோம்.
தத்கல் முறையில் கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 600 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ளேயே இது 38 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
அக்டோபர் முதல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்:
மதுரையில் உருவாக்கப்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகம் வரும் அக்டோபர் முதல் செயல்படும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலசந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
மதுரையில் பாஸ்போர்ட் அலுவலக கட்டடப் பணிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. இதையடுத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அக்டோபரில் செயல்படத் தொடங்கிவிடும்.
திருச்சிக்கு தெற்குப் பகுதியில் உள்ள அனைத்து தமிழக மாவட்டங்களும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் இப்போது வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இங்கும் புதிய கட்டடத்தை சொந்தமாகக் கட்ட வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் இடம் கேட்டுள்ளோம் என்றார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications