கோபால்சாமி கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
திருவட்டாறு:திருவட்டார் சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைத் தேர்தல் ஆணையல் கோபால்சாமியின் உருவப் பொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.
காங்கரை பகுதியில் தொகுதி நீக்கத்தைகக் கண்டித்து சத்திரகிரக போராட்டம் நடைபெற்றது. பெல்லார்மின் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ ஹேமசந்திரன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் தொகுதி நீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன் தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி, தொகுதி சீரமைப்பு குழு தலைவர் குல்தீப்சிங், மற்றும் சந்திரசேகர் உருவப் பொம்மைகளை அதிமுகவினர் எரித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications