வாள் சண்டையில் கத்தி குத்தி மாணவன் சாவு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:நாமக்கல்லில் நடந்த வாள் சண்டையின்போது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தால், சென்னை மாணவன் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

Baburaj

நாமக்கல்லில் உள்ள செல்வம் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான மாநில அளவிலான வாள் சண்டைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் படிக்கும் மாணவன் பாபு ராஜ் (13) கலந்து கொண்டார். போட்டிக்கு முன்பாக, பயிற்சி எடுக்க நினைத்த பாபு ராஜ், தனது பள்ளியைச் சேர்ந்த நாகராஜ் (15) என்ற மாணவருடன் எந்தவித தற்காப்பு நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளாமல் பயிற்சியில் ஈடுபட்டார்.

வாள் சண்டையில் ஈடுபடுவோர் அணிந்து கொள்ளும் பாதுகாப்பு உடைகளை இருவரும் அணிந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

அப்போது நாகராஜின் வாள் எதிர்பாராதவிதமாக பாபுராஜின் தலையில் பாய்ந்தது. ஆழமாக பாய்ந்ததால் தலையில் ஊடுறுவியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதிந்தார் பாபுராஜ். உடனடியாக அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பாபுராஜ் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வாள் மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் பாபுராஜ் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+