பாக். அச்சடித்த ரூ. 2.30 கோடி கள்ளநோட்டு சிக்கியது
ஹைதராபாத்:இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்காக பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டை ஹைதராபாத்தில் போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
![]() |
இந்தியாவின் மத ஒற்றுமையை, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தீவிரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தான், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுக்களையும் பெருமளவில் புழக்கத்தில் விட்டு வருகிறது.
இந்த நிலையில், துபாயைச் சேர்ந்த ஒபைது அலி என்பவரை ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய கரன்சிகள் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு பின்பு ஹைதராபாத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹைதராபாத்தை சேர்ந்த முகம்மது நஜாத், கலியா மற்றும் செய்யது கவுஸ்பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ஹைதராபாத்தில் புழக்கத்தில் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் சிக்கின.
அனைத்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாகும். ஹைதராபாத் நகரில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கு புழக்கத்தில் விடுவது எளிதாகும் என்பதற்காக அந்நகரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவர்கள் கைதான சில மணி நேரங்களில்தான் ஹைதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications