கம்யூ பிரமுகர் கொலை-பஞ். தலைவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் அரிகேசநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அரிகேசவநல்லூர் பாறையடி தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து.
இ.கம்யூ கட்சியின் பெருமன்ற மாவட்ட செயலாளரான இவர் மணல் கடத்தலுக்கு எதிராக செயல்பட்டதால் அப்பகுதி பஞ்சாயத்து துணை தலைவர் பழனி, ராமச்சந்திரன், முருகன், அம்பலம் ஆகியோர் இவரை கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வலியுறுத்தியிருந்தார்.
இந் நிலையில், தலைமறைவாக இருந்த பஞ்சாயத்துத் துணை தலைவர் பழனியை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications