ஹைதராபாத் குண்டுவெடிப்பு: வங்கதேசம் மறுப்பு-தீவிரவாதிகளுக்கு உதவிய நபர் கைது
ஹைதராபாத்:ஹைதாபாத் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 47 பேர் பலியான நிலையில் அங்கு பயன்படுத்தப்பட்டது ஆர்டிஎக்ஸ் வெடி குண்டுகள் என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு உதவி செய்ததாக முஸ்தாக் அக்மத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்துக்கு 60 கி.மீ. தூரத்தில் உள்ள பீபிநகர் என்ற இடத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பால் பியரிங்குகளை இவர் தான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் பீபிநகரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இவரைத் தவிர சைக்கிள் கடைகள் நடத்தி வரும் காஜா மொய்தீன், முபீன், ஷாம் ஆகிய 3 பேரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் முஸ்தாக்கின் நண்பர்கள் ஆவர்.
வங்கதேசம் மறுப்பு:
இதற்கிடையே ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் தீவிரவாதிகள் தான் காரணமாக இருக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளதை வங்கதேசம் மறுத்துள்ளது.
இது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை ஆலோசகர் அமகது செளத்ரி கூறுகையில்,
வங்கதேசத்தின் மீது குற்றம் சுமத்தியது அபாண்டமானது. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வங்கதேசத்திற்கு இந்த குண்டுவெடிப்பில் துளியும் தொடர்பு கிடையாது என்றார்.












Click it and Unblock the Notifications