திருச்செந்தூரில் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து 2 பேர் காயம்
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் ஆனந்த விலாச மண்டபத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 2 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக அழைக்கப்படுவது திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கனக்கான உள்ளுர், வெளியூர் பக்தர்கள் இங்கு கடலில் புனித நீராடி சுவாமி தரிசானம் பெற்று செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கோவிலின் சுற்றுப் பிரகாரத்திலும், மண்டபங்களிலும் தங்கியிருப்பது வழக்கம்.
கோவில் வாளகத்தில் தேவர் குடில் செல்லும் வழியில் ஆனந்த விலாச மண்டபம் உள்ளது. ஆவணி மற்றும் மாசி திருவிழா காலங்களில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதியுலா வந்த பின் இந்த மண்டபத்தில் வைத்துதான் சிறப்பு பூஜை நடைபெறும்.
இந் நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஆனந்த விலாச மண்டபத்தின் மேற்கூரை திடிரென இடிந்து விழுந்தது. இதைக் கண்டு அப்போது அங்கு நின்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இருப்பினும் இருவர் இடிபாடுகளில் சிக்கினர். உடனே அவர்களை அங்கு நின்றவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பழனியில் நேற்று ரோப் கார் அறுந்து விழுந்து 4 பேர் பலியானார்கள். அந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் இன்று திருச்செந்தூர் கோவில் மண்டபம் இடிந்து விழுந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications