கணவருக்கு பயங்கர கடி, மனைவி கைது
திருநெல்வேலி:நள்ளிரவில் கணவனின் மர்ம உறுப்பை கடித்த மனைவி கைது செய்ய்ப்பட்டார்.
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கும் கல்யாணி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தன்று தம்பதிகள் சந்தோசமாகவே வளைய வந்துள்ளனர். முதல் இரவு அன்று பொன்னுசாமிக்கும் கல்யாணிக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பொன்னுசாமி மிகக் கடுமையாக நடந்து கொண்டாராம். அதிலிருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சம்பவத்தன்று பொன்னுசாமிக்கும் கல்யாணிக்கும் மீண்டும் தாம்பத்திய சண்டே ஏற்பட்டுள்ளது. அப்போது நள்ளிரவில் ஆத்திரத்தில் கணவனின் கை, கால், மற்றும் மர்ம உறுப்பு ஆகியவற்றை கடித்துவிட்டார்.
வலியில் துடித்த பொன்னுசாமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பொன்னுசாமியின் புகாரின் பேரில் அவரது மனைவி கல்யாணியை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications