தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்:மதுரையில் வரதராஜன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் மாநிலச் செயலாலர் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுவையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது என்றார்.

ரேஷன் விநியோகத்ைத முறைப்படுத்த வேண்டும். பொதுச் செயல் திட்டத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும், அங்கீகரிக்கப்படாத பிரிவுத் தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும்,

அரிசி விலையை குறைக்க வேண்டும், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்தது. பின்னர் பிற்பகலில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+