பள்ளிக்கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டரூ.10 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் வடக்குன்குளத்தில் பள்ளிக் கூடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் முன்னாள் ஆசிரியர் இடைநிலை பயிற்சி மையம் நடந்து வந்த பள்ளிக் கட்டிடத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக நாகர்கோவில் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தற்போது பாழடைந்து பயனற்று கிடக்கும் அந்த கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வகுப்புகள் நடைபெறாததால் கதவுகள், ஜன்னல்கள் திறந்து கிடந்தன.
நாகர்கோவில் போலீசாருடன் ராதாபுரம் மற்றும் பணகுடி மதுவிலக்கு போலீசாரும் அங்கு சோதனை நடத்தினர். இதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 136 கேன்களில் எரிசாராயம் இருப்பது தெரிய வநத்து. அதனை போலீசார் கைப்பற்றி பணகுடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.10 லஞ்சம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications