முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு-டிசம்பர் 31 வரைஅரசுக்கு தமுமுக கெடு

Subscribe to Oneindia Tamil

பாபநாசம்:முஸ்லிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இந்த அமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமுமுக மாநிலத் தலைவர் ஜவாகருல்லா தலைமை வகித்தார். பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான ஹைதர் அலி உள்பட 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் டிசம்பர் 31க்குள் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைக்வேற்றக் கூடாது, தமிழகத்தில் உள்ளது போன்று புதுச்சேரியிலும் சிறுபான்மையினருக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+