நடிகர் மகளை விபச்சாரத்தில் தள்ளமுயற்சி-2வது மனைவியுடன் பாடகர் கைது
சென்னை:வில்லன் நடிகர் நம்பிராஜின் மகள் கண்மணியை, மனைவி என்ற போர்வையில் தனது வலையில் வீழ்த்தி அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற மேடைப் பாடகரையும், அவரது 2வது மனைவியையும் போலீஸார் கைது செய்தனர்.
புதுநிலவு என்ற படத்தை இயக்கியவர் நம்பிராஜ். மேலும் ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். என் ராசாவின் மனசிலே படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.
இவருக்கு 26 வயதில் கண்மணி என்ற மகள் உள்ளார். இவருக்கும், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த மேடைப் பாடகர் மோகன்தாஸுக்கும் காதல் ஏற்பட்டது. மோகன்தாஸ் ஒரு இசைக் குழவை வைத்திருக்கிறார். கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். மைக் மோகன்தாஸ் என்றும் இவருக்கு ஒரு செல்லப் பெயர் உண்டாம்.
![]() |
ஹிப்பித் தலையும், கழுத்தில் சில பல சங்கிலிகளுமாக பயங்கரமான கெட்டப்பில் இருப்பார் மோகன்தாஸ். சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இவர் மைக்கும், கையுமாக இருப்பது போன்ற பேனர்கள், போஸ்டர்களை அடிக்கடி பார்க்கலாம்.
வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி மோகன்தாஸை காதலித்து வந்த கண்மணி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மோகன்தாஸ் வீட்டுக்கு போய் விட்டார். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழத் தொடங்கினார்.
இந்த நிலையில்தான் மோகன்தாஸுக்கு ஏற்கனவே இரு முறை கல்யாணமான விவகாரம் கண்மணிக்குத் தெரிய வந்தது. முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மோகன்தாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அது இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆனால் அந்த வழக்கு முடியும் முன்பாகவே அபிராமி என்கிற ஸ்ரீதேவியை கல்யாணம் செய்து கொண்டார். அபிராமி, மோகன்தாஸ் குழுவில் பாடிக் கொண்டிருப்பவராம். இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில்தான் கண்மணியையும் தனது வலையில் வீழ்த்தி வீட்டுக்கு வரவழைத்து, வாழ்ந்துள்ளார் மோகன்தாஸ்.
அவருக்கு முன்பு போல பாடும் வாய்ப்புகள் வருவதில்லை. இதனால் பெரும் நிதி நெருக்கடியிலும் சிக்கியுள்ளார்.
ரூ. 30 லட்சம் வரை கடன் வாங்கி வைத்துள்ளார். கடன் கேட்டவர்கள் நெருக்க ஆரம்பிக்கவே, அவரும், அபிராமியும் சேர்ந்து கண்மணியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பெரும் பணம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
கண்மணியை விபச்சாரத்தில் ஈடுபடும்படி மோகன்தாஸ் வற்புறுத்தியதோடு அடித்து உதைத்துள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு அபிராமியும் அடித்து உதைத்துள்ளார்.
நேற்று ஒரு பெரிய பண முதலை பெரும் பணத்தோடு வந்து குடும்பப் பாங்கான பெண் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன்தாஸ், இரவு வருமாறு அவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் கண்மணியிடம் இரவு அவருடன் போக வேண்டும் என்று கூறி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் முடியாது என்று கண்மணி கூறியுள்ளார். இதையடுத்து அறையில் அடைத்துப் பூட்டியுள்ளனர். அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
ஒரு வழியாக அங்கிருந்து தப்பி நேராக தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் நடந்ததைக் கூறி அழுதுள்ளார் கண்மணி.
பதறிப் போபான நம்பிராஜ், தனது மகளுடன் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தார். ஆணையர் நாஞ்சில் குமரன், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் அபிராமி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications