திருச்செந்தூர் அரசு பள்ளியில் மாணவர்கள்கோஷ்டி மோதல்: பள்ளிக்கு விடுமுறை
திருச்செந்தூர்:திருச்செந்தூர் அரசு செந்திலாண்டவர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இடையே சில காலமாக மோதல் நிலவி வருகிறது.
இந் நிலையில் நேற்று காலை வகுப்பறை சுவரில் ஒரு பிரிவு மாணவர்கள் இன்னொரு பிரிவிரை விமர்சித்து விமர்சனங்களை எழுதினர். இதற்கு இன்னொரு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் தாக்கிக் கொள்ளவும் முயன்றனர். கும்பலாக கூடி அடிதடியில் இறங்க முயன்ற அவர்களை ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திரூச்செந்தூர் டி.எஸ்.பி சாமிதுரைவேலு, இன்ஸ்பெக்டர் கந்தன், மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களை மிகக் கடுமையாக எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.
மாணவர்களிடையே மீண்டும் பிரச்சனை வராமல் தடுக்க பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்டி மாணவர்களை எச்சரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதே பள்ளியில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications