சென்னை விமான நிலையத்தில் ஏ.எஸ்.பி.க்குசரமாரி கத்தி குத்து-சஸ்பெண்ட் காவலர் வெறி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த (சிஐஎஸ்எப்) உதவி எஸ்.பி. ஒருவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நாளை முதல் முறையாக சென்னைக்கு வருகிறார் பிரதீபா பாட்டீல். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் ஏற்கனவே பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதீபா பாட்டீல் வருகையால் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், விமான நிலைய வளாகத்தில் இந்த கத்தி குத்து நடந்துள்ளது.
விமான நிலைய ஓய்வறையில் உதவி எஸ்.பி. விஜயக்குமார் (48) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் ஆறுமுகம் (42) என்பவர் விஜயக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
விஜயக்குமாரின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அருகே இருந்த காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆறுமுகம் தப்பி ஓடி விட்டார். பின்னர் விஜயக்குமாரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதீபா பாட்டீல் வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியையும் எழுப்பியுள்ளது.
சரியாக பணிக்கு வராததால் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு விஜயகுமார் தான் முக்கிய காரணம் என்று கருதி இத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
தலைமறைவான ஆறுமுகத்தை போலீசார் தேடிவருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications