முகர்ஜி நாளையுடன் ஓய்வு - ராஜேந்திரன் புதிய டிஜிபி
சென்னை:தமிழக காவல்துறை தலைவர் டி.முகர்ஜி நாளையுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபியாக பி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
![]() |
தமிழக காவல்துறைத் தலைவராக தற்போது செயல்பட்டு வரும் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியாக, தற்போது தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள பி.ராஜேந்திரன் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார். 1973ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜேந்திரன், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர்.
தூத்துக்குடியில் உதவி எஸ்.பியாக பணியைத் தொடங்கிய அவர் பின்னர் ராமநாதபுரம் மேற்கு மற்றும் மதுரை வடக்கு எஸ்.பியாக பணியாற்றியுள்ளார். கியூ பிரிவு எஸ்.பியாகவும் பணியாற்றியுள்ளார்.
கடலோரக் காவல் படை டிஐஜி, சிபிசிஐடி ஐஜி, ஊழல் தடுப்புப் பிரிவில் ஐஜி, கோவை மாநகர காவல்துறை ஆணையர், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி என பதவிகளை வகித்துள்ள ராஜேந்திரன் தற்போது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக உள்ளார்.
1995ம் ஆண்டு காவல்துறை பதக்கம், 2006ல் குடியரசுத் தலைவர் பதக்கத்தை ராஜேந்திரன் பெற்றுள்ளார்.
புதிய டிஜிபியாக நாளை ராஜேந்திரன் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications