பிரதீபா பாட்டீல் நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை சென்னை வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
![]() |
குடியரசுத் தலைவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதீபா பாட்டீல் நாளை சென்னை வருகிறார். நாளை மாலை சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
அங்கு அவருக்கு ஆளுநர் பர்னாலா விருந்தளிக்கிறார். பின்னர் சனிக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் பிரதீபா பாட்டீல்.
அங்கு ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் ராஜீவ் காந்தி கலையரங்க அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் சென்னை விமான நிலையம் திரும்பும் பிரதீபா பாட்டீல் அங்கிருந்து மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதீபா பாட்டீல் வருகையையொட்டி சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில், வாகனச் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications