டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை:காரில் சவாரி சென்றவர்கள் துணிகரம்

Subscribe to Oneindia Tamil

ஆற்காடு:வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாடகைக்கு காரை எடுத்துச் சென்றவர்கள் அவரைக் கொன்று விட்டுத் தப்பினர்.

Murugan

ஆற்காடு வரதராஜ தெருவைச் சேர்ந்தவர் முருகன். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை தனது டாடா இன்டிகா காருடன் டிராவல்ஸ் நிறுவனம் அருகே நின்று கொண்டிருந்தார் முருகன்.

அப்போது சிலர் அங்கு வந்து காஞ்சிபுரம் போக வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார் முருகன்.

அங்கு போனதும் தனது வீட்டுக்குப் போன் செய்து இரவுக்குள் வீடு திரும்பி விடுவதாகத் தெரிவித்தார். ஆனால் நேற்று பிற்பகல் வரையிலும் முருகன் திரும்பவில்லை. அவரது செல்போனும் செயல்படவில்லை.

இதனால் கவலை அடைந்த அவரது மனைவி போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.

முடுக்கி விட்டனர். இந்த நிலையில் வாலாஜா அருகே தங்க நாற்கர சாலையில் ஒரு டாடா இன்டிகா கார் அனாதையாக நிற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர்.

காரின் வெளிப்புறம் ரத்தக் கறையாக காணப்பட்டது. காருக்குள் யாரும் இல்லை.

இந் நிலையில் ராணிப்பேட்டை குறுக்குச் சாலையில், ஒரு புதருக்குள் முருகன் பிணமாகக் கிடந்தார். அவர் தலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+