கரூர் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:கருர் மாவட்ட திமுக செயலாளர் உள்ளிட்ட முக்ககிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, ஜெயலலிதா குறித்து முதல்வர் கருணாநிதி அநாகரீகமாக எழுதியதாக கூறி தமிழகம் முழுவதும் முரசொலி நாளிதழ்களை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கருணாநிதியின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.

கரூரில் இந்தப் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது திமுகவினர் பெரும் தாக்குதலில் இறங்கினர். அதிமுகவினரை ஒட ஒட விரட்டியடித்தனர்.

பஸ், வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் தோகமலை அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

ஆனால், வன்முறையில் இறங்கிய திமுகவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்குக் கூட பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கருப்பையா வழக்குப் பதிவு செய்தார்.

அதை விசாரித்த நீதீபதி திமுக மாவட்ட செயலாளர், கருர் நகர திமுக செயலாலர் கனகராசு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பூவை ரமேஷ் பாபு, இளைஞர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+