இந்திய - சோவியத் அணு ஒப்பந்தம்தடம் புரண்ட பிரணாப் முகர்ஜி!!!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நாடாளுமன்றத்தில் இந்திய, அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து நடந்த காரசார விவாதத்தின்போது, வெளியுறவு அமைச்சர் இந்திய - சோவியத் அணு ஒப்பந்தம் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

Pranab Mukerjee

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்றும் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. லோக்சபாவில் பாஜக கூட்டணி உறுப்பினர்கள், இதுதொடர்பாக விவாதிக்க கூட்டு நடவடிக்கைகக் குழு அமைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அவர்களுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எந்தக் காரணத்தைக் கொண்டும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட மாட்டாது. இந்தியா, சோவியத் அணு ஒப்பந்தம் இறுதியானது.

இதை மறு பரிசீலனை செய்ய முடியாது. கூட்டு நாடாளுமன்றக் குழுவையும் கண்டிப்பாக அமைக்க மாட்டோம் என படு ஆவேசமாக கூறி விட்டு அமர்ந்தார்.

இந்திய, சோவியத் அணு ஒப்பந்தம் என்று பிரணாப் முகர்ஜி கூறியதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

ஆனால் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியோ அல்லது அருகில் இருந்த பிற அமைச்சர்களோ அல்லது வேறு எந்த உறுப்பினருமோ பிரணாப் முகர்ஜிக்கு உணர்த்தவில்லை என்பதுதான் வேடிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+