இந்திய பேராசிரியருக்கு அமெரிக்க ஃபெல்லோஷிப்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் சிவாஜி முகர்ஜிக்கு, அமெரிக்க அமைதிக் கழகத்தின் ஜென்னிங்ஸ் ரன்டோல்ப் ஃபெல்லோஷிப் விருது கிடைத்துள்ளது.
யேல் பல்கலைக்கழகத்தின் அரசியல் விவகாரத்துறையில் பேராசிரியர் சிவாஜி பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதம் குறித்து இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையைப் பாராட்டி அமெரிக்க அமைதிக் கழகம் இந்த ஃபெல்லோஷிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான வகையில் பேராசிரியர் சிவாஜியின் கட்டுரை அமைந்துள்ளதாகவும் அமெரிக்க அமைதிக் கழகம் பாராட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications