சென்னை பள்ளியில் மலேசிய சுதந்திர தின கொண்டாட்டம்
சென்னை:சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில் பயிலும் மலேசிய மாணவர்கள், தங்களது நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
மலேசிய நாட்டின் 50வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில் பயிலும் மலேசிய மாணவர்களும் தங்களது சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் ஸ்ரீ சிவ சங்கர் பாபா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மலாய், சீனம் மற்றும் தமிழ் மொழிப் பாடல்கள் இசைக்கப்பட்டன. மலேசியாவின் பெருமை, தமிழ், சீன, மலாய் கலாச்சாரங்களுக்கு மலேசியாவில் தரப்படும் முக்கியத்துவம் ஆகியவை குறித்து மாணவர்கள் பேசினர்.
கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் உரைகளும் இடம் பெற்றன. மாணவர்களின் நிகழ்ச்சிகளைப் பாராட்டிய சிவசங்கர் பாபா, மாணவர்கள் தாங்கள் சார்ந்த நாடுகளுக்கு விசுவாசமாக, நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications