புலித் தேவன் பிறந்தநாளை மீண்டும்நடராஜன் தலைமையில் நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:சசிகலாவின் கணவர் நடராஜன் தலைமையிலேயே மீண்டும் புலித் தேவன் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pulithevan

ஆங்கிலேயரை எதிர்த்து போராடி உயிர் துறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் நெல்கட்டும்செவல் ஜமீன் புலித்தேவன்.

இவரது பிறந்த நாள் விழா செப்டம்பர் 3ம் தேதி வருகிறது. கடந்த 6 ஆண்டு காலமாக புலித் தேவனின் வாரிசுகளில் ஒருவரான உள்ளமுடையார் துரையின் மகள் கோமதி முத்துராணியை பொருளாளராக கொண்டு சசிகலாவின் கணவர் மா.நடராஜனை தலைவராக கொண்ட புலித் தேவன் அறக்கட்டளை சார்பில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

இந் நிலையில் ஜமீன் வாரிசான கோமதி முத்துராணி சமீபத்தில் பொருளாளர் பதவியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துவிட்டார்.

இதையடுத்து புலித் தேவன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து நெல்கட்டும்செவலில் உள்ள புலித் தேவன் மாளிகையில் சாமித்துரை, சொக்கையா, முருகன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் மீண்டும் நடராஜன் தலைமையிலேயே புலித் தேவன் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடராஜனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+