பொதிகை ரயில்-கேரளா அதிகாரிகள் முட்டுக்கட்டை

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை:தென்காசியிலிருந்து இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தப் போவதாக செங்கோட்டை நகர அமைப்புகள் அறிவித்துள்ளன.

தென்காசி-செங்கோட்டை இடையே 7 கிமீ அகல ரயில் பாதை அமைக்கும் பணி 3 ஆண்டு காலமாக 21 கோடி ரூபாய் செலவில் நடந்து முடிந்து 3 மாதமாகிவிட்டது. ஆனாலும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டையிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் தாமதப்படுத்தி வருகின்றது.

இதற்காக வரும் செப்டம்பர் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் நிலையத்தினுள் ஆர்ப்பாட்டமும், 5ம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் நெல்லை-கேரள ரயிலை மறிக்கும் போராட்டமும், 15ம் தேதி உண்ணாவிரதமும், 20ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

இந்த மறியலில் தென்காசி எம்.பி. அப்பாத்துரை தலைமையில் நடத்தப்பட உள்ளது.

கேரளாவுக்கு சாதகம்:

பொதிகை ரயில் சென்னையிலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்டால் பாலக்காடு வழியாக கேரள செல்லும் ரயில்கள் பாதிப்படையும் என்றும், செங்கோட்டையிலிருந்து கேரளா செல்ல 9 கிலோமீட்டர் தான் என்பதாலும் கேரளத்தைச் சேர்ந்த தென்னக ரயில்வே அதிகாரிகள் இதற்கு வேண்டுமென்றே தடையை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

மதிமுக எம்.பியின் முயற்சி:

இந்த ரயில்பாதை பணிகள் முடிவடைய கடும் முயற்சி எடுத்தவர் சிவகாசி மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+