மீண்டும் விண்ணுக்குச் செல்ல ஆசை:மதுரையில் ராகேஷ் சர்மா பேட்டி

Subscribe to Oneindia Tamil

மதுரை:77 வயதில் நீல் ஆம்ஸ்டிராங் மீண்டும் விண்ணுக்குச் சென்றது போல, நானும் மீண்டும் விண்வெளிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளேன் என்று இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா கூறியுள்ளார்.

Rakesh Sharma

மதுரை அருகே உள்ள விரகனூரில் வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் ராகேஷ் சர்மா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்தை உருவாக்கி வருகிறது.

சர்வதேச அளவில் பல நாடுகள் ஒன்று சேர்ந்து நிலவில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் இந்தியர்களும் பங்கேற்க உள்ளது பெருமையான விஷயமாகும். தற்போது அன்டார்டிகாவில் நடைபெற்று வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்திய விஞ்ஞானிகள் பலர் உள்ளனர்.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளின் துணை இல்லாமல் இந்தியாவால் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். ஆனால் அதற்கான நேரம், செலவு அதிகமாகும்.

ரஷ்யாவில் இருக்கும் போது யோகா மூலமாக புவிஈர்ப்பு விசையை கட்டுப்படுத்த பயிற்சி மேற்கொண்டேன். பயோமெட்ரிக், அலாய், ரிமோட் சென்சிங், மெட்டீரியல் சயின்ஸ் போன்ற துறைகளில் இப்பபயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பூமியில் ஆராய்ச்சி செய்வதைவிட, விண்வெளியில் ஆராய்ச்சி செய்தால் சுற்றுப்புற சூழல் மாறுபாட்டை தெளிவாக அறியலாம்.

முதன் முறையாக நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்டிராங் தனது 77வது வயதில் மீண்டும் விண்வெளிக்கு சென்றார். அவரைப் போல் நானும் விண்வெளிக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்றார் ராகேஷ் சர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+