முதுமலை சரணாலயத்தில் யானை, புலி சாவு
Subscribe to Oneindia Tamil
உதகமண்டலம்:உதகமண்டலம், முதுமலை சரணாலயத்தில் ஒரே நாளில் யானை மற்றும் புலி ஆகியவை இறந்துள்ளன.
முதுமலை யானைகள் முகாமிற்கு அருகில் காலில் அடிபட்ட நிலையில் ஒரு புலி இறந்து கிடந்தது.
அங்கிருந்து சிறிது தொலைவில் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது வனத்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த யானை மின்வேலியில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், காட்டுப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளில் சிக்கி அடிபட்டு இறந்திருக்கக்கூடும் என தெரிவித்தனர்.
இறந்த யானை மற்றும் புலி ஆகியவை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் அடக்கம் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications