செங்கோட்டை: கோஷ்டி மோதலால் கலைஞர்டிவி பேனர் அகற்றம் - திமுகவினர் கொதிப்பு
செங்கோட்டை:செங்கோட்டையில் கோஷ்டிப் பூசல் காரணமாக கலைஞர் டிவி விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் நகராட்சித் தலைவர் மீது திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
திமுக சார்பில் கலைஞர் டிவி தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் முதல் இது முழுமையான ஒளிபரப்புக்கு வருகிறது. தற்போது சோதனை ஒளிபரப்பு நடந்து கொண்டுள்ளது.
கலைஞர் டிவியை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், செங்கோட்டையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இந்த பேனர் 3 இடங்களில் நகராட்சியின் அனுமதியோடு வைக்கப்பட்டது. தாம். இந்த நிலையில் திடீரென நேற்று பிற்பகல் இந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர்.
முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி அவற்றை காவல்துறை உதவியுடன் அகற்றியுள்ளனர். இதையறிந்த திமுக கவுன்சிலர்கள் கொதிப்படைந்தனர். திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் ரகீம்தான் இதற்கு காரணம் என்று அவர்கள் குமுறியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சிலர் கூறும்போது, செங்கோட்டையில் திமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். நகராட்சித் தலைவர் படத்தைப் போடாமல் இன்னொரு தரப்பினர் பேனர் வைத்ததால்தான் அவை அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications