வைகோ காரில் அரிவாளுடன் காத்திருந்த<br>பெண் - மதுரையில் பரபரப்பு!!
மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பயணம் செய்யவிருந்த காரில் அரிவாளுடன் பதுங்கியிருந்த பெண்ணைப் பிடித்
து மதிமுகவினர் போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குச் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் மதுரை சென்றார்.
ரயில் நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு வெளியே இருந்த காரில் ஏறப் போனார். அப்போது காருக்குள் சுடிதார் அணிந்திருந்த ஒரு பெண் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காருக்குள் ஏறாமல் அப்படியே நின்றார்.
உடனடியாக காருக்குள் புகுந்த மதிமுக நிர்வாகிகள் அந்தப் பெண்ணை சத்தம் போட்டபடி கீழே இறக்கினர். பின்னர் அவரை ரயில்வே
போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அந்தப் பெண் வைத்திருந்த கைப் பையை வாங்கி சோதித்தபோது அதில் ஒரு பெரிய அரிவாள் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டனர்.
அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் பாக்கியசெல்வி என்றும் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எதற்காக அரிவாளுடன் அவர் வைகோ காரில் பதுங்கியிருந்தார் என்பது குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது ஒரு மர்ம நபர் பெரிய கத்தியுடன் ஸ்டாலினைத் தாக்க வந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications