பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 19 பேர் பலி
டேராடூன்: உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ரி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், 19 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டம் கான்சலி என்ற இடத்திலிருந்து நேற்று (02-09-2007) காலை 10-30 மணியளவில் குட்டு என்ற இடத்திற்கு 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து சருன் என்ற கிராமத்திற்கு அருகில் வரும்போது விபத்துக்குள்ளாகியது.
சாலையிலிருந்து விலகிச் சென்ற பேருந்து அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்து பில்கி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25ஆயிரமும், லேசாக காயம் அடைந்த பயணிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உடனடியாக நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பி.சி.கந்தூரி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications