குடிநீர்ப் பிரச்சினை: திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் - ஜெ.
சென்னை: திண்டிவனத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறி நகராட்சியைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் இன்று (03-09-2007) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திண்டிவனத்தில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் நகர் முழுவதும் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கிறது.
இதைக் கண்டித்து இன்று (03-09-2007) திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆர்ப்பாட்டம்:
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எனது ஆட்சிக் காலத்தில் கடந்த 2004ம் ஆண்டு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 30 படுக்கை அறை வசதி கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
ஆனால் திமுக அரசு இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. ஆகவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்கக் கோரி அதற்கு எதிரே செப்டம்பர் 5ம் தேதி ஜெயலலிதா பேரவை செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications