திருச்சியில் 2 போலி நிருபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் போலி நிருபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூரைச் சேர்ந்த சந்திரமோகன், ரங்கநாதன் ஆகியோர் பல்வேறு பத்திரிக்கைகள், வார இதழ்களின் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வைத்துக் கொண்டு நிருபர்கள் என்ற பெயரில் வலம் வந்துள்ளனர்.
சமீபத்தில் 3 கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ) லஞ்சம் வாங்கும்போது அதை நேரில் பார்த்த இந்த இருவரும் அவர்களிடம் ரூ. 10,000 கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராவிட்டால் பத்திரிக்கைகளில் வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
இதையடுத்து இந்த மூன்று விஏஓக்களும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலி நிருபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
அவர்களது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications