10 ரூபாய் பேரத்தால் குண்டுவெடிப்பு<br/>குற்றவாளியை நழுவ விட்ட ஹைதராபாத் போலீஸ்
பெங்களூர்:
ஆட்டோ டிரைவருடன் 10 ரூபாய்க்குப் பேரம் பேசியதால் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபரை ஹைதராபாத் பெங்களூர் கைக்கு எட்டிய தூரத்தில் நழுவ விட்டுள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடி
ப்பு சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஒரு வங்கதேசப் பெண்ணை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் ஷாபீரா ரப்ஜானி. இவர் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக போலீஸார் வெளியிட்ட புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள குற்றவாளியின் சகோதரி இவர் என்று ஹைதராபாத் போலீஸார் கூறியுள்ளனர்.
ஹைதாபாத்தில் தங்கியிருந்த இவரது குடும்பமே கூண்டோடு தலைமறைவாகி விட்டது. ஷாபீராவின் சகோதரர் ரிஸ்வான் குவாஸி. இவர்தான் கடந்த மே மாதம் ஹைதாரபாத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
ரிஸ்வானின் திட்டப்படிதான் மெக்கா மசூதியில் டிபன் பாக்சில் குண்டு வைத்து அதை ஷாபீரா மசூதியில் வைத்துள்ளார். மேலும் ஹைதாராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பத்திற்குத் தேவையான வெடிபொருட்களையும் ஷாபீராதான் கொண்டு வந்துள்ளார்.
இந்த விவரங்கள் தெரிய வந்ததைத் தொடர்ந்து ரிஸ்வானைப் பிடிக்க பெங்களூருக்குத் தனிப்படை போலீஸார் விரைந்தனர். குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருந்த ரிஸ்வானைப் பிடிப்பதற்காக சாதாரண உடையில் ஆட்டோ ஒன்றை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு சென்றனர்.
ரிஸ்வான் வீடு இருக்கும் இடத்தை அடைந்ததும் ஆட்டோவை நிறுத்தி இறங்கியுள்ளனர். அப்போது பேசிய கட்டணத்தை விட 10 ரூபாய் குறைத்து போலீஸார் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர்களை போலீஸார் என்று அறியாத ஆட்டோ டிரைவர் பேசிய கட்டணத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று சண்டை பிடித்துள்ளார்.
அவருடன் போலீஸாரும் வாக்குவாதத்தில் இறங்கினர். இப்படியாக சில நிமிடங்கள் சண்டை நீடித்துள்ளது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த ரிஸ்வானுக்கு போலீஸார் வந்துள்ள விவரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் வீட்டின் பின் பகுதி வழியாக தப்பிச் சென்று விட்டார்.
இதை அறியாத போலீஸார் அந்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் சில நிமிடங்களுக்கு முன்புதான் ரிஸ்வான் தப்பிச் சென்றது அவர்களுக்குத் தெரிய வந்தது.
ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் ரிஸ்வானைப் பிடித்திருக்க முடியும். கைக்கு எட்டிய தூரத்தில் முக்கிய குற்றவாளி இருந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் நழுவ விட்ட தனிப்படை போலீஸாரின் செயலால் ஹைதராபாத் காவல்துறை கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
தற்போது பெங்களூர் போலீஸார் உதவியுடன் நகர் முழுவதும் சல்லடை போட்டு தப்பி விட்ட ரிஸ்வானைப் பிடிக்க ஹைதராபாத் போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications