ஹைதராபாத் குண்டுவெடிப்பு: வங்கதேசத்தில்br/தீவிரவாத அமைப்பின் தலைவன் கைது!
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் நடந்த மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவரும், இரட்டை குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்தவருமாக கருதப்படுபவருமான தீவிரவாதி அபு ஹம்சாவை வங்கதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் கடந்த 25ம் தேதி நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு வங்கதேசத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹர்கத்துல் ஜிஹாதி என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு மற்றும் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவரான இந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபு ஹம்சா (இவர் ஹைதாரபாத்தைச் சேர்ந்தவர்) வங்கதேசத்தில் தலைமறைவாக இருப்பதை ஹைதராபாத் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வங்கதேச போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்ப்பட்டது. அதன் அடிப்படையில் வங்கதேச போலீஸார் நேற்று இரவு, இந்திய - வங்கதேச எல்லையில் வைத்து ஹம்சாவை போலீஸார் கைது செய்தனர்.
இவரை இந்தியாவுக்குக் கொண்டு வர உளவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications