2 கார் விபத்துகளில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கடலூர்:கடலூர் அருகே பில்லூர் என்ற இடத்தில் நடந்த பயங்கர கார் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலிருந்து ஒரு கார் பெரம்பலூர் மாவட்டம் கோலகநத்தம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது பில்லூர் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர் திசையில் வந்த லாரி, காருடன் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த செல்வராணி (40), மதுராம்பாள் (70), கண்ணகி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

கண்ணகியின் மகள் ஷாலினி (5), கார் ஓட்டுநர் செல்வராஜ் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் புதுவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்-லாரி மோதல் 2 பேர் பலி

இதற்கிடையே புதுக்கோட்டை அருகே காரும் லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் இரண்டு பேர் பலியாயினர். 4 பேர் காயமடைந்தனர்.

மூவேந்தர் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மீன் ஏற்றி வந்த லாரி கார் மீது மோதியது.

இதில் காரில் வந்த சதீஷ் மற்றும் ஹிதயத்துல்லா படுகாயமைடந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+