பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்!
குளித்தலை:
குளித்தலையில் பள்ளி மாணவியை கற்பழித்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கருர் மாவட்டம் குளித்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் புனிதா. இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தார் புனிதா.
அப்போது புனிதாவின் அண்டை வீட்டில் வசிக்கும் மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளர் பிச்சைமுத்து தனது நண்பர்களுடன் புனிதாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்திச் சென்றுள்ளார்.
புனிதாவை தனது வீட்டிற்கு கொண்டு சென்று கற்பழித்துள்ளார். மேலும் பிச்சைமுத்துவின் நண்பர்களும் கற்பழித்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக புனிதாவை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து புனிதா தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் போலீஸ் புகார் கொடுத்தனர்.
ஆனால் பிச்சைமுத்துவை கைது செய்யக் கூடாது என குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் போலீஸாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தந்துள்ளனர்.
திமுக தலைமைக்கும் இந்தத் தகவல் போகவே பிச்சைமுத்துவை உடனடியாகக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பிச்சைமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற எம்எல்ஏ மாணிக்கம் மீதும் நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications