டாடா: ''ஜெ. நேரடியாக களம் இறங்குவார்''!
தூத்துக்குடி:
டாடா ஆலை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாக களம் இறங்குவார் என்று அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் ஆலை வருவதை யாருமே விரும்பவில்லை. அனைவரும் எதிர்க்கிறார்கள். இந்த ஆலையைக் கொண்டு வர ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சித்தால், அதை எதிர்த்து ஜெயலலிதா நேரடியாக களம் இறங்குவார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, மணல் கடத்தல், லாட்டரி என அனைத்தையும் எதிர்க்கிறார். இவற்றை தடுக்க தமிழக அரசால் முடியவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
இரு கட்சியினரும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்துகின்றனர். இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளன.
விலைவாசி உயர்வு மக்கள் மத்தியில் பெரும் மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் ஆட்சி மாற்றம் அமைவது உறுதி என்றார் செங்கோட்டையன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications